மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு

பரமசிவம் முத்துசாமி

இரா.குறிஞ்சி வேந்தன்
 
        மானுடம் முழுவதையும் தம் பாட்டுத்திறத்தாலே கூட்டிவைத்த பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்காணோம்’ என்று குறிப்பிட்டு, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்றும் அருளாணை இட்டார். அம்மகாகவியின் கனவு இன்றைக்குக் கண்முன்னே நனவாகி வருகின்றது.
 
     வடவேங்கடம், தென்குமரி ஆகிய இடைப்பட்ட நானிலத்தில் தோன்றிய தமிழ் இன்று உலகத்தையே தன்வசப்படுத்தியிருக்கிறது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் செழித்தோங்கி உலகமுழுதாளுகின்றது.
 
    எங்கெல்லாம் தமிழர்கள் கால்பதித்தார்களோ, அங்கெல்லாம் தமிழும் தன்தடம்பதித்துக் கிளைத்து வளர்ந்திருக்கிறது. திரைகடலோடித் திரவியம் தேடப் புறப்பட்ட தமிழர்களின் தோள்தழுவிச் சென்றது தமிழ்மொழி. தமிழியம் பரவிய உலகநாடுகளுள் குறிப்பிடத்தக்கது மலாயாபூமி. தாய்மண்ணை நேசிக்கும் எந்த மக்களும் தமிழர்களை விரும்புவர், காரணம் தமிழர்கள் எந்த மண்ணையும் தன் தாய்மண்ணாகக் கொண்டு போற்றுவர் என்பதே. 
 
    வரலாறு தன்னைப் புதுப்பித்துக் கொள்வது போல, தமிழகத் தமிழ், இந்தியத்தமிழ், அயலகத்தமிழ் வரலாறு என்பதான வரிசையில் ‘மலேசியப் பேச்சுத்தமிழ் வரலாறு’ ஒரு புதிய தடம்.
 
     தான் பெற்ற இன்பமாகிய தமிழ்மொழியின் மாண்பை எங்கே தன் சந்ததியினர் மறந்து விடுவாரோ என்று கவலை கொள்ளும் ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் இந்நூல் அது நீக்கும் மருந்து. ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி ரப்பர்த் தோட்டங்களுக்குள் விளைந்த இத்தமிழை அழகுடை நூல் வடிவில் செதுக்கித் தந்திருக்கிறார்கள் பேராசியர்கள் முனைவர் பரமசிவம் முத்துசாமி, முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகிய இருவரும். காலப்பெட்டகமாம் இந்நூலை வெளியிடுதற்கு இசைந்த அவர்களுக்கு நன்றி கூறி, பெருமையுடன் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.

அறிமுகம்

பரமசிவம் முத்துசாமி, முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் ஆகிய இரு ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல் ‘மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு’ஆகும்.தமிழ்மொழியின் வரலாற்றோடு இணைத்து தமிழ்நாட்டில் மட்டுமின்றி கடல் கடந்த தேசங்களில் தமிழ் வளர்ந்த நிகழ்வுப் பதிவுகளை இந்நூல் சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறது.மேலும், பிறமொழித் தாக்கத்தினால் மலாயாவில் வாழ்ந்த தமிழர்களின் தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் கலப்புகள் முதலியவை ஆராயப்பட்டுள்ளன.

உட்தலைப்புகள்

இந்நூல் பொருளடக்கமாக

பேச்சுத்தமிழ்ப் பாதையிலே...
பேச்சுமொழி - ஓர் அறிமுகம்
வரலாற்றுக் காலத்தில் பேச்சுத்தமிழ்
ஐரோப்பியர்காலப் பேச்சுத்தமிழ்
தோட்டப்புறம் வளர்த்த பேச்சுத்தமிழ்
அண்மைக்காலப் பேச்சுத்தமிழ்

ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பேச்சுமொழி அறிமுகம்

இலக்கணக் கட்டிலிருந்து விலகி பாமர மக்கள் மொழியைத் தம் விருப்பத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியபோது பேச்சுத்தமிழின் தோற்றம் உருவாகியது. இலக்கியங்களிலும் கூட, பாமர மக்களின் விடுகதைகள், பழமொழிகள், உவமானங்கள் முதலியன இடம் பெற்றன. பொதுவாகப் பேச்சு வழக்கு நாகரிகப் பேச்சு வழக்கு, கொச்சைமொழிப் பேச்சு வழக்கு என இருவகையாகப் பகுபடுகிறது.இதைத் தொல்காப்பியம், 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' (தொல்.பொருள்.நூற்பா56) எனக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

வரலாற்றுக் காலத்தில் பேச்சுத்தமிழ்

கடல் கடந்து சென்ற தமிழர்களின் பதிவுகள் கீழை நாடுகளில் விரவிக் கிடக்கின்றன. இன்றைய மலாயாவை அவர்கள் காழகம் என்னும் பெயரில் அழைத்துள்ளனர். புவியியல் அமைப்பின்படி மலாயத் தீபகற்பக் கடற்கரையும் சோழமண்டலக் கடற்கரையும் நேரெதிரே அமைந்துள்ளன. இது இரு தேசங்களுக்கு இடையில் வாணிகம் முதலான உறவு கொள்ளக் காரணமாக அமைந்தது. மலாயாவின் கடற்கரைப் பட்டினங்களில் குடியேறிய வாணிகர்கள் அங்குள்ள வட்டாரமொழியோடு தமிழைக் கலந்து பேசத் தொடங்கினர். இதனால் தமிழுடன் சேர்த்து மலாய்க் கலப்புமொழி உருவாகியது.இவ்வாறு உருவாகிய மலாய்த் தமிழ்க் கலப்புச் சொற்களை இந்நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பியர் காலப் பேச்சுத் தமிழ்

ஐரோப்பியர்கள் தங்களின் காலனி ஆதிக்கத்தை மலாயா தீபகற்பத்திலும் நிறுவினர். இதன்மூலம் அவர்களின் மொழிகளான போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், டச்சு முதலியனவும் தமிழ் மற்றும் மலாயோடு சேர்ந்து புதிய சொற்களுக்கு வித்திட்டன. ஐரோப்பியர்களின் பணிக்குத் தமிழகத்திலிருந்து சென்ற மக்கள் தத்தம் வட்டார வழக்கையும் சேர்த்து இக்கலப்பிற்கு உட்படுத்தினர். குறிப்பாக தமிழ் இசுலாமியர்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஆகியோர்தம் தமிழ்நடை இன்றைக்குச் சீனமொழியோடும் இணைந்திருக்கக் காணலாம் என்பதைத் தகுந்த சான்றாதாரங்களுடன் இந்நூல் முன்வைக்கிறது.

தோட்டப்புறம் வளர்த்த பேச்சுத் தமிழ்

கி.பி.1786-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்காகப் பினாங்குத்தீவு விலைக்கு வாங்கப்பட்டது. பிரான்சிஸ் லைட் என்னும் ஆங்கிலேயர் இத்தீவைக் கெடா சுல்தானிடம் இருந்து விலைக்கு வாங்கினார். இதற்குப் பின்னரே பினாங்குத்தீவில் தமிழர்களின் குடியேற்றம் தொடங்கியது. மேலும், டச்சு ஆதிக்கத்திலிருந்த மலாக்காவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின்னர் அங்கும் தமிழர்களைக் குடியேற்றுவது ஆரம்பித்தது. கி.பி.1830-ஆண்டில் மலாயா முழுவதுமிருந்த தோட்டங்களில் தமிழர்களின் குடியேற்றம் பன்மடங்காக அதிகரித்தது.

இன்று மலேசியத் தமிழர்களாக நிலைத்துக் காணப்படுபவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட தோட்டப்புறத்தமிழர்களின் வழித்தோன்றல்களே எனலாம். அவர்களுடன் பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டுகளில் வாணிபத்திற்காக நகர்ப்புறங்களில் வந்து குடியேறிய தமிழர்களும் இன்றைய மலேசியத் தமிழ்ச்சமூகத்தின் அங்கத்தினராக உள்ளனர்.

தோட்டப்புறங்களுக்குக் கொண்டு வரப்பட்ட தமிழர்களுள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். குறிப்பாக திருச்சி, மதுரை, இராமநாதபுரம், சேலம், தஞ்சை, செங்கற்பட்டு, வடஆற்காடு, தென்னாற்காடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர்.

தமிழர்களுக்கு அடுத்த நிலையில் ஆந்திரமாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் இனத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் மலேசியாவுக்குக் குடிபெயர்ந்தனர். தமிழகத்திலிருந்து வந்த தொழிலாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாவர். அடிப்படைக் கல்விகூட அற்ற பாமரர்களாக அவர்கள் விளங்கினர். இவர்கள் தமிழகத்தில் பேசிய மொழிநடையிலேயே மலேசியாவிலும் பேசினர். தமிழகத்தில் வழங்கும் பேச்சுத்தமிழ் வழக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஓவ்வொரு வகையாக அமைந்திருப்பதை இந்நூல் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகிறது.

அண்மைக்காலப் பேச்சுத் தமிழ்

அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் மொழி அறிவியல் சாதனங்களோடு கூடியதாக மாறிவரும் காலத்தில் அண்மைக்காலப் பேச்சுத் தமிழ் முற்றிலும் பன்மொழிக் கலப்புடையதாகவே இருக்கிறது. இதை, தரமுள்ள பேச்சுத் தமிழ், தரமற்ற (பிறமொழிக் கலப்பான) பேச்சுத் தமிழ் என்று இருவகைப்படுத்திக் காட்டுகிறது இந்நூல்.

முழுக்கவும் ஆங்கிலமோ, தமிழோ அல்லாமல் ஆங்கிலத்துக்கு இடையில் சிறுசிறு தமிழ்ச் சொற்களைக் கலந்து பேசும் வழக்கம் மலேயத்தின் இன்றைய பேச்சுத் தமிழ்ப் பதிவாக அமைந்துள்ளது.

சமூகத்தின் பலநிலைகளில் இடம் கண்டு அத்தகு உரையாடல்களை அட்டவணைப்படுத்தி, மெல்லத் தடுமாறி வரும் தமிழ்மொழியின் பேச்சு வழக்கின் அபாயத்தை இந்நூல் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இத்துறைக்கு இது முதல் நூல் எனினும் பொருந்தும். இந்நூலை புதுவை கபிலன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்தி - மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு நூல் வெளியீடு

புதுச்சேரி, ஆக. 23: சமூக, பண்பாட்டு ரீதியில், மலேசியாவும் தமிழகத்தோடு இணைந்த ஒரு பகுதிதான் என்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் பெ. ராஜவேலு குறிப்பிட்டார்.

 புதுவைத் தமிழ்ச்சங்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற "மலேசியப் பேச்சுத்தமிழ் வரலாறு' என்ற நூலை வெளியிட்டு அவர் பேசியது:

 மலேசிய மக்களின் பேச்சுத் தமிழுக்கும், தமிழக மக்களின் பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை. சில சிறிய மாற்றம் மட்டுமே இருக்கிறது.

 அதோடு, கலாசார ரீதியாகவும் தமிழகத்தைப் போலவே அங்கும் கோயில்கள், வழிபாடுகள், உணவு முறைகள் இருக்கின்றன. மலேசியத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள், தமிழகம் போலவே காட்சியளிக்கின்றன.

 புதுச்சேரியின் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டுமென்பது முதல்வர் ரங்கசாமியின் எண்ணம். அதற்காக, மலேசியா சென்று தமிழர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

 அங்குள்ள பகுதிகள் சுற்றுலாவுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன.

 அதேபோல, இங்கும் செய்ய வேண்டியிருக்கிறது. சமூக, பண்பாட்டு ரீதியில் தமிழகத்தோடு ஒருங்கிணைந்த பகுதியாக மலேசியா விளங்குகிறது.

 அங்கிருந்து வந்துள்ள எழுத்தாளரின் நூலை புதுவையில் வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

 சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினர் இரா.மீனாட்சி:

 பிற மொழிகளில் தமிழ் கலந்துள்ள போதிலும், தமிழில் கலந்துள்ள பிற மொழிகள் குறித்தும் நூலாசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

 இங்கிருந்து செல்லும் தமிழர்களால், மலேசியத் தமிழர்களின் நல்ல தமிழ் புழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இது நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய செய்தி.

 தமிóழனின் பேச்சுத் தமிழ், வீட்டிலேயே இல்லை. யாருடனும் யாரும் பேசுவதில்லை. உணர்வுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

 முதியோர்களின் அனுபவம் இளைஞர்களுக்குக் கிடைக்கவில்லை. இளைஞர்களின் தொழில்நுட்பம் மூத்த தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை. இதை நாம் சரி செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

 தமிழர்கள் தமிழில் பேச வேண்டும். தமிழில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். தமிழில் ஒரு படைப்பைப் பாராட்டக் கூடத் தெரியவில்லை. தமிழ் திசைமாறிப் போயிருக்கிறது என்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம் பேராசிரியர் அ.அறிவுநம்பி:

 மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு நூலில், தமிழர்களின் கொச்சைப் பேச்சும், நாகரீக பேச்சுத் தமிழும் கலந்து இடம் பெற்றிருக்கிறது. கால வரிசைப்படியும், பேச்சுத் தமிழின் ஆட்சி எப்படி என்பது பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து போன வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் வணிகத்துக்காக எழுதாமல், இனத்துக்காக எழுதியிருக்கிறார்கள் என்றார்.

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி துணைப் பேராசிரியர் சொ.சேதுபதி:

 மொழியின் உயிர்வடிவம் சிதையாமல் காப்பது பேச்சு. 16 நாடுகளில் பேசும் மொழியாக இருக்கும் தமிழ், மலேசியாவில் எத்தகைய இடம் வகிக்கிறது என்பதை வரலாற்றுச் சுவையோடு சொல்கிறது இந்நூல். எழுத்து மரபும், பேச்சு நடையும் கலந்த கவித்துவத்தோடு, சங்ககாலத்தில் இருந்து சமகாலம் வரை பேச்சுத்தமிழ் மலேசியாவில் எவ்வாறு இருக்கிறது என்பதை பதிவு செய்கிறது இந்நூல். வருங்காலத்தில் தமிழ் சிதைந்துவிடாமல் செம்மைபெற வேண்டுமென்கிற அக்கறையோடு நூலாசிரியர்கள் தக்க  சான்றுகளைத் தந்து, இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள். இத்துறைக்கு இதுவே முதல் நூல் என்று பெருமையாகச் சொல்லலாம் என்றார்.

 நூலாசிரியர்கள் மலேசியாவின் புத்ர மலேசியப் பல்கலைக்கழக அயலகமொழிகள் துறை பேராசிரியர் பரமசிவம் முத்துசாமி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி துணைப் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

 புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நூலை வெளியிட்ட கபிலன் பதிப்பகத்தைச் சேர்ந்த சொ.அருணன் நன்றி கூறினார்.

நன்றி - தினமணி

தினமலர் செய்தி- மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு - நூல் வெளியீடு

புதுச்சேரி:தமிழ்ச் சங்கத்தில்"மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு' என்ற ஆராய்ச்சி நூலை அமைச்சர் ராஜவேலு வெளியிட்டார்.மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பரமசிவம் முத்துசாமி, புதுச்சேரி பாரதிதாசன் அரசின் மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் இணைந்து, மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு என்ற நூலை எழுதியுள்ளனர்.இந்நூலின் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. Œங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். மகளிர் கல்லூரி பேராசிரியர் சேதுபதி நூல் அறிமுக உரையாற்றினார். அமைச்சர் ராஜவேலு நூலை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

நூல் பற்றிய திறனாய்வை சாகித்யா அகாடமி செயற்குழு உறுப்பினர் மீனாட்சி, புதுச்சேரி பல்கலைக்கழக தமிழியற்புலப் பேராசிரியர் அறிவுநம்பி பேசினர். நூல் ஆசிரியர்கள் பரமசிவம் முத்துசாமி, குறிஞ்சிவேந்தனும் ஏற்புரையாற்றினர்.
கபிலன் பதிப்பக நிறுவனர் அருணன் நன்றி கூறினார்.

பரமசிவம் முத்துசாமி, முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் ஆகிய இரு ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல் ‘மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு’ ஆகும்.தமிழ்மொழியின் வரலாற்றோடு இணைத்து தமிழ்நாட்டில் மட்டுமின்றி கடல் கடந்த தேசங்களில் தமிழ் வளர்ந்த நிகழ்வுப் பதிவுகளை இந்நூல் சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறது.மேலும், பிறமொழித் தாக்கத்தினால் மலாயாவில் வாழ்ந்த தமிழர்களின் தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் கலப்புகள் முதலியவை ஆராயப்பட்டுள்ளன.

உட்தலைப்புகள்

இந்நூல் பொருளடக்கமாக

பேச்சுத்தமிழ்ப் பாதையிலே...
பேச்சுமொழி - ஓர் அறிமுகம்
வரலாற்றுக் காலத்தில் பேச்சுத்தமிழ்
ஐரோப்பியர்காலப் பேச்சுத்தமிழ்
தோட்டப்புறம் வளர்த்த பேச்சுத்தமிழ்
அண்மைக்காலப் பேச்சுத்தமிழ்

ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பேச்சுமொழி அறிமுகம்

இலக்கணக் கட்டிலிருந்து விலகி பாமர மக்கள் மொழியைத் தம் விருப்பத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியபோது பேச்சுத்தமிழின் தோற்றம் உருவாகியது. இலக்கியங்களிலும் கூட, பாமர மக்களின் விடுகதைகள், பழமொழிகள், உவமானங்கள் முதலியன இடம் பெற்றன. பொதுவாகப் பேச்சு வழக்கு நாகரிகப் பேச்சு வழக்கு, கொச்சைமொழிப் பேச்சு வழக்கு என இருவகையாகப் பகுபடுகிறது.இதைத் தொல்காப்பியம், 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' (தொல்.பொருள்.நூற்பா56) எனக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

வரலாற்றுக் காலத்தில் பேச்சுத்தமிழ்

கடல் கடந்து சென்ற தமிழர்களின் பதிவுகள் கீழை நாடுகளில் விரவிக் கிடக்கின்றன. இன்றைய மலாயாவை அவர்கள் காழகம் என்னும் பெயரில் அழைத்துள்ளனர். புவியியல் அமைப்பின்படி மலாயத் தீபகற்பக் கடற்கரையும் சோழமண்டலக் கடற்கரையும் நேரெதிரே அமைந்துள்ளன. இது இரு தேசங்களுக்கு இடையில் வாணிகம் முதலான உறவு கொள்ளக் காரணமாக அமைந்தது. மலாயாவின் கடற்கரைப் பட்டினங்களில் குடியேறிய வாணிகர்கள் அங்குள்ள வட்டாரமொழியோடு தமிழைக் கலந்து பேசத் தொடங்கினர். இதனால் தமிழுடன் சேர்த்து மலாய்க் கலப்புமொழி உருவாகியது.இவ்வாறு உருவாகிய மலாய்த் தமிழ்க் கலப்புச் சொற்களை இந்நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பியர் காலப் பேச்சுத் தமிழ்

ஐரோப்பியர்கள் தங்களின் காலனி ஆதிக்கத்தை மலாயா தீபகற்பத்திலும் நிறுவினர். இதன்மூலம் அவர்களின் மொழிகளான போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், டச்சு முதலியனவும் தமிழ் மற்றும் மலாயோடு சேர்ந்து புதிய சொற்களுக்கு வித்திட்டன. ஐரோப்பியர்களின் பணிக்குத் தமிழகத்திலிருந்து சென்ற மக்கள் தத்தம் வட்டார வழக்கையும் சேர்த்து இக்கலப்பிற்கு உட்படுத்தினர். குறிப்பாக தமிழ் இசுலாமியர்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஆகியோர்தம் தமிழ்நடை இன்றைக்குச் சீனமொழியோடும் இணைந்திருக்கக் காணலாம் என்பதைத் தகுந்த சான்றாதாரங்களுடன் இந்நூல் முன்வைக்கிறது.

தோட்டப்புறம் வளர்த்த பேச்சுத் தமிழ்

கி.பி.1786-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்காகப் பினாங்குத்தீவு விலைக்கு வாங்கப்பட்டது. பிரான்சிஸ் லைட் என்னும் ஆங்கிலேயர் இத்தீவைக் கெடா சுல்தானிடம் இருந்து விலைக்கு வாங்கினார். இதற்குப் பின்னரே பினாங்குத்தீவில் தமிழர்களின் குடியேற்றம் தொடங்கியது. மேலும், டச்சு ஆதிக்கத்திலிருந்த மலாக்காவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின்னர் அங்கும் தமிழர்களைக் குடியேற்றுவது ஆரம்பித்தது. கி.பி.1830-ஆண்டில் மலாயா முழுவதுமிருந்த தோட்டங்களில் தமிழர்களின் குடியேற்றம் பன்மடங்காக அதிகரித்தது.

இன்று மலேசியத் தமிழர்களாக நிலைத்துக் காணப்படுபவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட தோட்டப்புறத்தமிழர்களின் வழித்தோன்றல்களே எனலாம். அவர்களுடன் பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டுகளில் வாணிபத்திற்காக நகர்ப்புறங்களில் வந்து குடியேறிய தமிழர்களும் இன்றைய மலேசியத் தமிழ்ச்சமூகத்தின் அங்கத்தினராக உள்ளனர்.

தோட்டப்புறங்களுக்குக் கொண்டு வரப்பட்ட தமிழர்களுள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். குறிப்பாக திருச்சி, மதுரை, இராமநாதபுரம், சேலம், தஞ்சை, செங்கற்பட்டு, வடஆற்காடு, தென்னாற்காடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர்.

தமிழர்களுக்கு அடுத்த நிலையில் ஆந்திரமாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் இனத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் மலேசியாவுக்குக் குடிபெயர்ந்தனர். தமிழகத்திலிருந்து வந்த தொழிலாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாவர். அடிப்படைக் கல்விகூட அற்ற பாமரர்களாக அவர்கள் விளங்கினர். இவர்கள் தமிழகத்தில் பேசிய மொழிநடையிலேயே மலேசியாவிலும் பேசினர். தமிழகத்தில் வழங்கும் பேச்சுத்தமிழ் வழக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஓவ்வொரு வகையாக அமைந்திருப்பதை இந்நூல் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகிறது.

அண்மைக்காலப் பேச்சுத் தமிழ்

அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் மொழி அறிவியல் சாதனங்களோடு கூடியதாக மாறிவரும் காலத்தில் அண்மைக்காலப் பேச்சுத் தமிழ் முற்றிலும் பன்மொழிக் கலப்புடையதாகவே இருக்கிறது. இதை, தரமுள்ள பேச்சுத் தமிழ் தரமற்ற (பிறமொழிக் கலப்பான) பேச்சுத் தமிழ்) என்று இருவகைப்படுத்திக் காட்டுகிறது இந்நூல்.

முழுக்கவும் ஆங்கிலமோ, தமிழோ அல்லாமல் ஆங்கிலத்துக்கு இடையில் சிறுசிறு தமிழ்ச் சொற்களைக் கலந்து பேசும் வழக்கம் மலேயத்தின் இன்றைய பேச்சுத் தமிழ்ப் பதிவாக அமைந்துள்ளது.

சமூகத்தின் பலநிலைகளில் இடம் கண்டு அத்தகு உரையாடல்களை அட்டவணைப்படுத்தி, மெல்லத் தடுமாறி வரும் தமிழ்மொழியின் பேச்சு வழக்கின் அபாயத்தை இந்நூல் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இத்துறைக்கு இது முதல் நூல் எனினும் பொருந்தும். இந்நூலை புதுவை கபிலன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்

- நன்றி விக்கிபீடியா

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

Contact

Kapilan Pathippagam,

arunankapilan@gmail.com

321, Mahaveer Nagar,
Lawspet
Puducherry -605 008.
India

+91.9442379558

Search site

கபில வரிசை

27/11/2009 17:11

published

© 2009 All rights reserved.

Make a free websiteWebnode