பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு

பறம்புமலை -

 திருக்கொடுங்குன்றம் 

வரலாறு   

 மரு. பரமகுரு

 

 

பறம்பு  குறித்து பிரபஞ்சன்

சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன் பாரி. வேளிர்குல மன்னர் களில் மிகுபுகழ் பெற்றவன். ஓரியக் குடியைச் சேர்ந்தவனாக அறியப்படு கிறான். இன்று பிரான்மலை எனப் படும் பறம்புமலை மற்றும் அதை யடுத்த முன்னூறுக்கும் மேலான ஊர் களுக்கு மன்னனாக அறியப்படுபவன். சங்கத் தமிழின் மிக முக்கியப் புலவர் கபிலர், இவனது அவைக்களப் புலவராகவும் நண்பனாகவும் இருந் துள்ளார். பாரிக்கு இரண்டு பெண்கள் அங்கவை சங்கவை என்ற பெயரினர். ஆடும் விறலியர்க்கும் பொன்னரி மாலை, பொற்றாமரைப் பூ முதலான அணிகலன்கள் அளித்தும், பாணர்களுக்கு தேரும் யானையும் (யானையைக் கட்டி சோறுபோடும் வசதியையும்) வழங்கிய செய்திகளை சங்கப் பாடல்கள் சொல்கின்றன.

நிழலற்றப் பாலைவெளியில், நிழல் தரும் ஒற்றை மரமாக அவன் இருந் தான் என்கிறது ஒரு கவிதை. பாரி பாரி என்று கொடையாளியை மட்டும் சொல்கிறீர்களே, மாரி மாரி (மழை) என்ற ஒன்றும் இருப்பதை ஏன் மறந்து போகிறீர்கள் என்று கேட்கிறது ஒரு கவிதை. பற்றிப் படரக் கொழுகொம்பின்றி வாடி மெலிந்த முல்லைக் கொடிக்குத் தன் தேரையே ஈந்தான் என்று இவன் கொடைத்திறம் மிகுத்து பேசப்படுகிறது. இதைக் கொடை மடம் என்று அக்காலமக்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன்பொருள், பேசும் சக்தி அற்ற சிற்றறி உயிர்க்கும் சௌகர்யம் செய்துகொடுத்தான் என்ப தாகவோ சுற்றுச்சூழலை இசைவாக்கி வைத்தான் என்பதாகவோ வைத்துக் கொள்ளலாம். பேரரசர்கள் இவன் பால் பொறாமை அல்லது தாழ்வு மனப்பான்மை கொண்டு போர் செய்து முதலில் தோற்று, சில ஆண்டு கள் சென்றபின் பெரும் படையுடன் மீண்டும் வந்து போரிட்டுப் பாரியைக் கொல்கிறார்கள்.

பாரி படுகளம் காண்பதோடு நிறை வடைகிறது நாடகம், இங்கு பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய சித்திரங் களையும் தொகுத்துக் கொள்ளலாம். சங்ககாலத்தில் பறம்பு எனப்பட்ட இம்மலையைத் தேவார காலத்தில் திருஞான சம்பந்தர் பாட்டில் திருக் கொழுங்குன்றம் என்றழைத்துள்ளார் அவர். வளைந்த உச்சியை உடையது கொடும் குன்றம். கொடு என்பது வளைவு. சங்ககாலத்தில் (கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற் றாண்டுக் காலப்பகுதி) பறம்பு மலையைப் பாரி நாடு, பறம்பு நாடு, பற நாடு, பறம்பு மலைச் சுனை, பனிச்சுனை என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ஔவை, மிளைக்கந்தனார், நக்கிரர்,நன்னாகன்,பெருஞ்சித்திரன், நல்லூர் நத்தத்தனார் முதலிய புலவர்கள் பாரியையும் அவன் நாட்டையும் பாடியுள்ளார்கள்.

பிறமலைக் கள்ளர் வகுப்பார், பிரான் மலை என்ற பறம்பு நாட்டிலிருந்து மதுரை நோக்கி வந்து அமைந்தார்கள் என்றும் பறம்பு நாட்டு அல்லது பற மலைக் கள்ளர்கள் என்றழைக்கப்பட் டவர்களே பின்னாளில் பிறமலைக் கள்ளர் என்றானார்கள் என்கிற கருத்து வரலாற்றாய்வாளர்களிடம் உண்டு. பாரிவேட்டை என்று தமிழக அளவில் நடத்தப்படும் சடங்கு, இந்து மதத் தோடு இணைக்கப்பட்டு சென்ற நூற் றாண்டுவரை நடந்துள்ளது. புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை டயரிக் குறிப்பு களில் புதுச்சேரியில் பாரிவேட்டை நடந்துள்ள குறிப்பு இடம் பெற்றுள்ளது. பறம்புப்பகுதியில் அது இன்றும் நடக்கிறது. மலைக்காடுகளில் நிலை பெற்ற வேட்டைச் சமூகம் வேறுவேறு வாழ்க்கைப் பயணங்களில் பயணப் பட்டாலும் தம் பூர்வ வாழ்க்கையை நினைவு மனத்தின் ஊடாகச் சுமந்து சென்ற புனைவின் வெளிப்பாடு பாரி வேட்டை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பறம்புமலை-திருக்கொழுங்குன்றம் வரலாறு எனும் தலைப்பில் குன்றக்குடி ஆதின வித்வான் பெரும் புலவர் மரு.பரமகுரு எழுதிய (கபிலன் பதிப்பகம், 321.  முதல் தளம், மகாவீர்  நகர், குருவடிக்குப்பம்புதுச்சேரி) மிகுந்த சுயமான ஆராய்ச்சி கொண்ட அருமையான புத்தகத்தில், பாரியின் பறம்பு நாட்டு எல்லைகள் முதல்முறையாகக் கண்டடையப்பட்டுள்ளது. நாடுகளின் எல்லைப் பிரச்னை மேலெழும் இன்று இது தேவையான ஆய்வாகும்.

பறம்புநாட்டுத் தென்எல்லை திரு மோகூர், பரமக்குடி எனப்படும் பறம்புக்குடி, கிழக்கெல்லை காளை யார் கோயில், அனுமந்தக்குடி, வடக் கெல்லை, கானாடுகாத்தான், குடுமி யான்மலைப்புறம், மேற்கெல்லை மருங்காபுரி துவரங்குறிச்சி, அழகர் மலைக் கிழக்குப் பகுதி. இந்தப் பகுதிக்குள் இருந்த ஊர்கள் 300 என்று அக்காலத்தில் கணக்கிடப்பட்டிருக் கிறது. இந்த பூகோள அமைப்புப்படி பாரியின் பறம்பு நாடு, சேர சோழ பாண்டிய எல்லைப் பிரதேசங்களுக் குள் உள்ளங்கை போல இருந்துள் ளது. மூவேந்தரின் போர் இந்த எல்லை குறித்தும் ஏற்பட்டிருக்க மிகுந்த வாய்ப்புண்டு.

இன்றும் ஒரு மக்கள் வரலாற்றுத் தகவல். முல்லைத்குத் தேரீந்த பாரி யின் கொடைமனம், மக்களின் மன சாட்சியாகிக் கொம்பின்றிக் தளும்பும் கொடிகளைக் காணும் போதெல்லாம் மனம் தளும்பி, கொடி தளும்பினால் குடி தளும்பும் எனும் ஒரு சொல வடையே இப்பகுதியில் நிலவுகிறது என்கிறார்கள் பேராசிரியர்கள் சேது பதியும், அருணனும். இன்றும் இப் பகுதிக்குழந்தைகளுக்குப் பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்ல மங்கை, அங்கவை, சங்கவை என்று பெயர் வைக்கப்படுவதையும் குறிப் பிட்டுள்ளார்கள் பேராசிரியர்கள். சமகாலத்தில் மறைந்த குன்றக்குடி அடிகளார் பாரி விழா எடுத்து இறவாத பாரிக்கு இறவாமை ஏற்படுத்தினார். 

 

parambumalai 

thirukkodunkuntram varalaru

by 

Maru. Paramaguru

 
This book has arrived at a right hour during the 125th birth anniversary of poet Bharathi. It is a research work which brings light to the much unknown picture of the great poet. We all know Bharati - a poet, creative writer (stories & essays), a cartoonist, journalist, translator, and lyrict. But it is less known that he was a great orator too. 
This book gives from reliable sources the gist of lectures presented by Bharati in arranged hall meetings i.e Karungalpalayam library, Pondicherry Progressive Union Cricket Club, Karaikkudi Hindu Madabimana Sangam, Tamil Association of Presidency College Madras, Banaras pooja hall,  and public addresses rendered in places like-  Pottalapudur mosque, Thiruvannamalai, Cuddalore, and Triplicane sea shore meetings etc. 
It is recorded in this special book that Bharathi had established himself as an eloquent speaker and kept his audience in spell bound. He also showed keen interest in training young people including girls to speak in front of selected audience on various topics to be discussed at that particular moment aiming for Liberty, Equality and Fratarnity. Bharathi though strssed and strained by financial constraints and heavy opposition from rulers police and the fundamentalists, stood for Sathyam and Dharmam.
Bharathi used very intresting mass communication techniques to attract the public, for example, advanced announcements, distribution of printed notices display of posters and singing loudly leading to a collective Bajan and arranging plotform techniques to carry the voice to reach out a larger crowed even without a mike or loudspeeker. 
The author has researched methodically in collecting the basic substance. The drafts of the lectures given by Bharathi were collected by the author from the various resources such as original writings of Bharathi, narrations from Bharathi’s admirers such as ie. Va.Ra., B.Shri, Ra. Kanagalingam, Bharathidasan etal. More materials were drawn from the official reports submitted by C.I.D cops, presently kept in archives.
The 256 pages of the book contain a very substantial and authentic materials on Bharati’s speeches which gives space for further studies and higher research. 

 


 

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உரை வண்ணத்தில் உருவான பக்தி இலக்கியப் பனுவல்
Posted by Picasaமார்கழிப் பாக்கள்


 
பாடுகிறேன் பரமகுரு
 
Posted by Picasa


திருநெடுந் தாண்டகத்தில் அகப்பொருள் நூல் வெளியீட்டு விழா
புதுவை கம்பன் கழகச் சான்றோர் பெருமக்கள்
Posted by Picasaஇன்னரும்கனிச்சோலைகள்செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்னசத்திரம்ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதினாயிரம்நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும்புண்ணியம்கோடி
ஆங்கோர்ஏழைக்குஎழுத்துஅறிவித்தல்
- பாரதியார்
Posted by Picasaகபிலன் பதிப்பகம்
தங்களை அன்போடு வரவேற்கிறது!

 
Posted by Picasaஜீவா நூற்றாண்டு


ஜீவா நூற்றாண்டு விழா - சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தொடரும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஜீவா நூற்றாண்டு விழாவில் ஜெயகாந்தன் பேட்டிகள் நூல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் வெளியிட, திருச்சிராப்பள்ளி உருமு தனலட்சுமி கல்லூரித் தாளாளர் மோதி இராஜகோபாலன் அவர்கள்

 

 

 


ஜீவா நூற்றாண்டு விழா புத்தகக் காட்சியிலிருந்து...
புத்தகக் காட்சி ஜெயகாந்தன் பேட்டிகள் நூலை ஜெயகாந்தன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜீவா நூற்றாண்டு விழாவில் வாசகர்கள் கபிலன் பதிப்பக நூல்களை விருப்பமுடன் வாங்கிச் சென்றனர். விழாவில் உள்ளூர் அன்பர்கள் உள்ளிட்ட பல அறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கடந்து ஆடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே!

 

 

அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான் கண் அற்று, அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே; ஆங்கு
மரந்தோறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளில் கொள்ளலிர் வாளில் தாரலன்
யானறி குவென் அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே!

 

 

 

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவன்வரை அன்னே!

 

 

 

 

 

 

ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரைசென்று நின்றோர்க்கும் தோன்றும்; மன்றகளிறு மென்று இட்ட கவளம் போலநறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்வார் அசும்பு ஒழுகு முன்றில்தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே!

 
கபிலர்பொருட்குறள்

 


 


 
 
 
கபிலன் வெளியீடுகள்
 
 
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி (என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு

 திருச்சிராப்பள்ளி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் தொண்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
௨00௮ ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலாக கபிலன் பதிப்பகத்தின் வெளியீடான, முனைவர் சேதுபதி எழுதிய சொற்பொழிவாளர் பாரதியார் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் இப்பெரு மக்கள் பெரு மதிப்பும் அன்பும் அளித்துப் போற்றுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அண்ணாச்சி என எல்லாராலும் அன்போடு அழைக்கப் படுகிற மூத்த எழுத்தாளர் திரு. பொன்னீலன் அவர்களின் அன்பு பெரு விருது.

குழந்தை உள்ளதோடு எல்லோரையும் தாவி அணைக்கிற அவரைப் பார்க்கிறபோது உள்ளத்தில் மட்டில்லா மகிழ்ச்சி பொங்கும்.

செந்தீ நடராஜன் உள்ளிட்ட அன்பர்கள் யாவரும் போற்றுதற்குரியவர்கள்.
Posted by Picasaஅற்புதத் துறவி அடிகளார் நூல் வெளியீடு ௨00௮ ஆம் ஆண்டு
குன்றக்குடித் திருமடக் குருபூசை விழாவில்
தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் வெளியிடப் பெற்றது.
உடன் நீதியரசர் இராம சுப்பிரமணியம் உள்ளிட்ட திருமடத்து அன்பர்களும், நூலாசிரியரும்
Posted by Picasaஅற்புதத் துறவி அடிகளார்
Posted by Picasa
 

 

 

 

 

 

 

 

Contact

Kapilan Pathippagam,

arunankapilan@gmail.com

321, Mahaveer Nagar,
Lawspet
Puducherry -605 008.
India

+91.9442379558

Search site


 

கபில வரிசை

27/11/2009 17:11

published

  

© 2009 All rights reserved.

Make a free websiteWebnode